மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட பிரபல சன் டிவி நடிகை!

Photo of author

By Sakthi

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கண்மணி தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் லீசா நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

லிசா சென்ற 2016 ஆம் வருடம் பலே வெள்ளையத்தேவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார். அதனையடுத்து பொதுநலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா மைடியர் லிசா மடை திறந்து போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ,அவ்வப்போது புகைப்படங்கள், மற்றும் காணொளிகளை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில், தற்சமயம் வீட்டின் மொட்டை மாடியில் மழையில் நனைந்தவாறு வெளியீட்டு இருக்கின்ற ஒரு காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.