இந்தியில் நடிக்காததற்கு இதுதான் காரணம்..! பாலிவுட் சினிமாவை பற்றி கூறிய நடிகை ஜோதிகா..!

Photo of author

By Priya

Actress Jyothika: தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார் என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல், உலக நாயகம் கமல், தல, தளபதி போன்ற அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார். இவர் நடிகர் சூர்வை காதலித்து திருமணம் செய்து தற்போது தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

ஆனால் அதன்பிறகு 36வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-எண்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது சினிமாவில் நடித்து வரும் ஜோதிகா அவரின் கணவர் சினிமாவில் நடிப்பதற்கு உறுதுணையாக இருப்பதாக கூறினார். இருவரும் அவர்களின் குழந்தைகளோடு மும்பையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா, நான் முதலில் சினிமாவில் அறிமுகமானது இந்தியில் தான். ஆனால் நான் நடித்த அந்த படம் சரியாக ஓடவில்லை. அதனால் எனக்கு இந்தியில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை. அதன்பிறகு எனக்கு தென்னிந்தியாவில் இருந்து அதிக வாய்ப்புகள் கிடைத்தது. அதனை நான் சரியாக பயன்படுத்தி கொண்டு என்னுடைய நடிப்பை வெளிக்காட்டினேன். எனவே நான் தென்னிந்திய சினிமாவில் மட்டுமே நடித்து வந்தேன்.

எனக்கு ஒருமுறை கூட இந்தியில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். அவர் இந்தியில் நடித்த சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ஜோதிகா இந்தி சினிமாவில் தனது கவனதை திருப்பியுள்ளார்.

மேலும் படிக்க: Muthu Movie: ரஜினியின் நண்பனாக நடிக்க இருந்த பிரபல நடிகர்.. அந்த காரணத்தால் தான் விலகினேன்..!