அதை சொல்ல துப்பு இல்ல!!  யார பாத்து பயப்படுறீங்க!! அமரன் படத்தை பார்த்து கொந்தளித்த  பிரபல நடிகை!!

Photo of author

By Sakthi

Amaran movie:அமரன் திரைப்படத்தை பற்றி தனது கருத்தை தெரிவித்தார் நடிகை மதுவந்தி.

உலக நாயகன் கமல்ஹாசனின்,  “ராஜ்கமல் நிறுவனம்” தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம் தான் “அமரன்”. இந்த படம் தீபாவளி அன்று வெளியானது.  இப்படமானது “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற இந்திய ராணுவ வீரரின் உண்மை கதையை கொண்டு  படமாக்க பட்டதாகும். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினர்.

எனவே  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்ட படமாக இருந்து வந்த நிலையில், நேற்று தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. முதல் மூன்று நாட்களில் 150  கோடி வரை வசூல் செய்தது. இப் படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து இருப்பார்.

சிவகார்த்திகேயன் நடித்த மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்திற்கு எந்த வித சமுதாய அடையாளமும் கொடுக்கப்பட வில்லை , ஆனால் சாய் பல்லவி நடித்த இந்து ரெபேக்கா வர்கீஷ் கதாபாத்திரத்திற்கு கிறிஸ்தவ மத அடையாளத்தை காட்டும் விதமாக சிலுவை அணிந்து இருப்பார். எனவே அமரன் படத்தில்  முகுந்த் வரதராஜன் சமூக பின்புலம் கட்டவில்லை என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுந்தது.

அந்த வகையில் அமரன் படம் பார்த்த நடிகை மது வந்தி படத்தின் கதாநாயகனாக வரும் முகுந்த் வரதராஜன்  “பிராமணர்” சமூகமாக காட்ட உங்களுக்கு என்ன கேடு என்றும், யாரை பார்த்து பயப்படுறீங்க ,என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலாக இயக்குனர் பேட்டி ஒன்றில் முகுந்த் வரதராஜன் தான் ஒரு இந்தியனாக தான் தன்னை இவ்வுலகிற்கு கட்ட விரும்பியதாக  அவரது குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.

அதனால் முகுந்த் வரதராஜனுக்கு எவ்வித சாதி அடையாளத்தை கட்ட வில்லை என்று கூறினார் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.