முஸ்லிம் மதத்தை சார்ந்த பெண்கள் ஹிஜாப் எனப்படும் உடல் முழுவதும் மூடப்பட்டிருக்கும் பர்தாவை அணிந்து கொள்வார்கள் இது அவர்களின் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
என்னதான் இது அவர்களின் வழக்கமாக இருந்தாலும் அவர்களுடைய வழக்கத்தை கல்லூரிகள் மீது திணிக்கக் கூடாது என்று கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி நிர்வாகம் அவர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அவர்கள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து இந்து மதத்தைச் சார்ந்த மாணவர்கள் காவி துண்டை அணிந்து வந்து போராட்டம் நடத்தினார்கள்.
இதன் பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது ஹிஜாப் என்பது இன்றியமையாத அங்கம் கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறது ஹிஜாப் அணியாமல் அனைவரும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக பிரபல கன்னடம் மற்றும் தமிழ் படம் நடிகை மாளவிகா அவினாஷ் தன்னுடைய வலைப்பதிவில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அனைத்தும் பறிபோய்விட்டது, நாடகம் முடிவுற்றது, மீண்டும் எல்லோரும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும், மதிப்புமிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் முஸ்லிம் மதத்தில் ஹிஜாப் இன்றியமையாத அங்கமில்லை என்று தெரிவித்திருக்கிறது. அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள் தற்போது கட்டுப்படுத்தப்படுகிறது. உத்தரவுகளை பிறப்பிக்க அரசுக்கு அனைத்து அதிகாரமுமிருக்கிறது.
அனைத்து உரிமைகளும் நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்தார். அவருடைய என்ற பதிவு சர்ச்சையை ஏற்படுத்தகியிருக்கிறது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. அதனை கண்ட பலரும் நடிகை மாளவிகாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும், கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.