ஜோ படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் ரியோ- மாளவிகா காம்போ..!

Photo of author

By Priya

சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜோ திரைப்படம். இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரியோ நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜோ. இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக சுஜி கேரக்டரில் நடித்தவர் தான் மாளவிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த படத்தில் (Rio Malavika Next movie) ரியோ-மாளவிகா-வின் ஜாேடி பெரிய அளவில் பேசப்பட்டது.

ஜோ படத்தில் அனைவருக்கும் பிடித்த ஜோடியகாவும் இவர்கள் இருந்தனர். இந்நிலையில் மீண்டும் ரியோ நடிக்கும் புதிய படத்திற்கு (Rio New Movie) நடிகை மாளவிகா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பிளாக்‌ஷிப் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்குகிறார். இந்த படத்திற்கு  இசையமைப்பாளராக சித்துகுமார் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஷீலா ராஜ்குமார், ஜென்சன் திவாகர், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு, இன்னும் 2 மாதங்களில் முடிவடைந்து இந்த வருடத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் திருணமான ஆண்களின் பிரச்சனையை கூறும் திரைப்படமாக இது இருக்கும் என்று இந்த படத்தின் இயக்குநர் கலையரசன் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதனை பெண்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தை குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.