புஷ்பா பட பாடலில் நடிகை மீனா..!! அப்போ சமந்தா அவ்ளோதானா?

Photo of author

By Priya

Actress Meena: தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் தான் நடிகை மீனா. இவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். நடிகை மீனா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

தமிழில் இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முத்து திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இவர் ஜப்பன் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். நடிகை மீனா தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். மேலும் இவர் அப்போது அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக மிகவும் பிஸியாக நடித்து வந்தார்.

இவர் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்ற மென்பொறியாளரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவரின் கணவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்றுக்காரணமாக இறக்க, தற்போது மீனாவும் அவரது குழந்தை நைனிகாவும் இருவரும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மீனா அவரது இன்ஸ்டாகிராமில் புஷ்பா 2 பட பாடலான புஷ்பா புஷ்பா பாடலுக்கு நடனமாடி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார். இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதனை கண்ட அவரின் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் மீனா என்றும் பதிவுகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: கனகா என்று நான் தான் பெயரை மாற்ற சொன்னேன்..! நடிகர் ராமராஜன்!!