முன்னணி நடிகை மீது எழுந்த பரபரப்பு புகார்!

Photo of author

By Sakthi

நடிகை மீரா சோப்ரா தன்னை முன்கள பணியாளர் என்று போலியான அடையாளத்தை காண்பித்து நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகார் எழுந்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தானே பிரிவு தலைவர் நிரஞ்சன் தாக்கரே தடுப்பூசி போட மீரா சோப்ரா தவறான வழியை பின்பற்றி இருக்கிறார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அதோடு மீரா சோப்ரா முன் களப்பணியாளர் என தெரிவித்த அடையாளத்தையும் பகிர்ந்திருக்கிறார். ஆனால் நடிகை மீரா சோப்ரா இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் நாம் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பப்படுகிறோம் ஆனாலும் நாம் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முயற்சி செய்கின்றோம். அதேபோல எனக்கு தெரிந்த நண்பர்களிடம் உதவி கேட்டு முயற்சி செய்தேன். ஒரு மாத முயற்சிக்குப் பின்னர் ஒரு மையத்தில் பதிவு செய்ய இயன்றது. என்னுடைய ஆதார் அட்டையை அனுப்புமாறு கேட்டார்கள்.

சமூக வலைதளத்தில் பரவிவரும் அடையாள அட்டை என்னுடையது கிடையாது. பதிவு செய்வதற்காக என்னுடைய ஆதார் அட்டை என்னிடம் கேட்கப்பட்டது. நான் ஆதார் மட்டும் தான் கொடுத்தேன் உங்கள் கையொப்பம் இல்லாத எந்த அடையாளமும் செல்லுபடி ஆகாது. என்னுடைய அடையாள அட்டை என்ற பெயரில் போலியாக முதல்முறையாக வலைதள பக்கத்தில் வந்ததை நானே பார்த்தேன். இதைப் போன்ற நடைமுறைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு இது போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டை செய்யப்பட்டிருந்தால் அது எப்படி ஏன் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.