நடிகை மீராமிதுனுக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது பலரும் அறிந்ததுதான். இன்னும் சொல்லப்போனால் அவரை வைத்து மீம்ஸ் தயாரிப்பாளர்கள் அதிகமாக மீம்ஸ்களை தயாரித்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இதனைத் தொடர்ந்து அவர் தற்போது பல அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சுருளிவேல் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை வழங்கியிருக்கிறார்.

அதில் நடிகை மீரா மிதுன் தன்னை பற்றியும், முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாகவும், அவதூறான கருத்துக்களை தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்திருக்கிறார்கள் இதனை தொடர்ந்து மீரா மிதுன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது மீராமிதுன் இதுபோல அவரவர் கருத்துக்களை சமூக வலை தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

சமீபத்தில்கூட எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.