அக்காவாக நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி கேட்ட நடிகை நயன்தாரா..! எத்தனை கோடி தெரியுமா?

Photo of author

By Priya

அக்காவாக நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி கேட்ட நடிகை நயன்தாரா..! எத்தனை கோடி தெரியுமா?

Priya

Actress Nayanthara

Actress Nayanthara: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர் சினிமா திரையுலகில் தனக்கென தனி இடம் பிடத்து, படத்தில் ஹூரோவுக்கு இணையான மாஸ் ஓபனிங்கை கொண்டுள்ளவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது இயகுனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார். இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் கீத்து மோகன்தாஸ் இயக்கி வரும் கே.ஜி.எப் புகழ் யாஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யாஷ், கதாநாயகியாக நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் இந்த படத்தின் நடிகர் யாஷ்-க்கு அக்காவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், அதன் பிறகு கால்சீட் காரணமாக விலகியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

எனவே டாக்சிக் (toxic movie update in tamil) படத்தில் நடிகர் யாஷ்க்கு அக்காவாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் கதை கூறப்பட்டதாவும், அந்த கதை அவருக்கு பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தான் அக்காவாக தான் நடிக்க தனது சம்பளத்தை 2 மடங்காக உயர்த்தி கேட்டுள்ளார் நடிகை நயன்தாரா. அதாவது ரூ.20 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ரூ.10 கோடி முதல் ரூ.11 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஒரு வசனம் பேசி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகர்.. எல்லாம் கே.எஸ் ரவிக்குமாரை தான் சேரும்..!