Breaking News

கடும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனா!!! உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!!!

கடும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனா!!! உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!!!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது.

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா அவர்கள் 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்டி தியைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் 2018ம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்களின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து அனைவருடைய மனதையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த ராஷ்மிகா தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்பொழுது ஹிந்தி திரைப்படங்களிலும் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடிக்க தெடங்கியுள்ளார். இந்த வருடம் ரிலீஸ் ஆன மிசன் மஜ்னு திரைப்படத்தில் கண் தெரியாதவர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ரன்பீர் கபூர் நடித்து வரும் அனிமல் திரைப்டத்திலும் நடித்து வருகிறார்.

உடலை அழகாகவும் பிட்டாகவும் வைத்துக் கொள்வதற்கு அதிக கவனம் செலுத்தும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா அவர்களும் ஒருவர். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக அவரே வெளியிட்டார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.