மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!!

0
203
#image_title

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!!மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!!

சங்கீதா அவர்கள் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே திரைப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியும் கதாநாயகியாகவும்,50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெயர் போனவர். இவர் பூவே உனக்காக மற்றும், எல்லாமே என் ராசா தான் என்ற திரைப்படத்தில் பிரபலமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

2000 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் செய்த கையோடு திரையுலக பயணத்திலிருந்து விலகிவிட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சங்கீதா அவர்கள் தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் என்று செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து சங்கீதா அவர்கள் கூறியதாவது, இனிமேல் நான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் என்றும், எனக்கு அடுத்து அடுத்து தமிழ் திரையுலகில் நடிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் கூறியுள்ளார்.

சங்கீதாவின் இந்த வருகையை பலரும் வரவேற்கின்றனர்.

author avatar
Jeevitha