ஜெயலலிதா அம்மா எனக்கு எப்போதும் டாடா சொல்லுவாங்க..!! திமிரு பட நடிகை ஈஸ்வரி..!!

Photo of author

By Priya

Actress Sriya Reddy: தமிழ் சினிமாவில் சிலர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பவர் ஒருசிலர் தான். அப்படி இன்றளவும் மக்கள் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்த நடிகை தான் ஸ்ரேயா ரெட்டி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் தமிழில் சாமுராய் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தமிழில் திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

ஆனால் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் என்றால் அது திமிரு தான். படையப்பா நீலம்பரிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நம் நினைவுக்கு முதலில் வருபவர் திமிரு பட ஈஸ்வரி தான். திமிரு படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது என்று தான் கூறவேண்டும். அதிலும் அவர் கூறும் ஏலே இசுக்கு.. என்ற டயலாக் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரைட் தான்.

இவரின் இந்த டயலாக்கை டிக்டாக் வந்த சமயத்திலும், தற்போது ரீல்ஸ்களிலும் பெண்கள் அதிக அளவு நடித்து அவர்களின் சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வந்தனர். இன்றளவும் இவரின் நடிப்பு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஸ்ரேயா ரெட்டி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் நான் ஜெயலலிதா அம்மாவின் வீட்டு பக்கத்து வீடு என்றும், தினமும் அவர் தலைமை செயலகத்திற்கு காரில்  செல்லும் போது  நானும் என் தங்கையும் எங்கள் வீட்டில் நின்று டாடா காண்பிப்போம். அவர் எங்களை பார்த்து சிரித்தபடியே தினமும் டாடா காண்பிப்பார். அது எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். சில சமயங்களில் ஜெயலலிதா அம்மா பிஸியாக சென்றுவிடுவார். அப்போது நானும், என் தங்கையும் ஜெயலலிதா அம்மா டாடா சாென்னார்களா? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வோம்.

நான் 25 வருடங்களாக போயஸ்காடனில் வசித்தேன். அப்பாேது நான் முன்னாள் முதல் ஜெயலலிதா (cm jayalalithaa)  பார்த்து வியந்திருக்கிறேன். அதிலும் கரண் தபார் மற்றும் ஜெயலலிதா  இன்டர்வியூக்களை பார்த்து இவரை போல் நாம் இருக்க வேண்டும் என்று நிறைய முறை நினைத்துள்ளேன் என நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறியுள்ளார்.

மேலும் படிக்க: அப்பா இறந்ததற்கு கூட போகல.. தவறா பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய கோவை சரளா..!