1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்!

Photo of author

By Hasini

1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்!

இந்திய திரையுலகில் சாதனை புரிந்த நடிகை ஆட்சி என அனைவராலும் பெயர் பெற்றவர் ஆவார்.50 ஆண்டுகளாக திரைத்துறையில் முத்திரை பதித்த நடிகை ஆவார்.

அவருடைய இயற்பெயர் கோபி சாந்தா ஆகும்.அவர் பிறந்தது மன்னார்குடி என்றாலும் அவரின் சிறு வயதில் குடும்பகஷ்டம் காரணமாக மன்னார்குடியில் இருந்து மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூரில் குடி பெயர்ந்தது.

அவர் தாயாரின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினாலும், குடும்ப வறுமை காரணமாகவும் 12 வயதில் இருந்து மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.அப்போது அவர் நடித்த ஒரு கதாபாத்திரமான மனோரமா அவரின் பெயரானது.

அதன் பிறகு பல மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.அந்த நடிப்பில் அவர் தன்னை நிரூபித்தார். எந்த குடும்ப பின்னணியும் இல்லாத நிலையில் கவிஞர் கண்ணதாசன் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்தார்.

அவர் தனது டிராமா குழுவின் மேனேஜர் எஸ்.எம்.ராமநாதன் என்பவரை காதலித்து 1954 ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்.1955 ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.பூபதி என பெயரிட்டார்.ஆனால் அவரது காதல் வாழ்க்கையோ சொல்லும் அளவுக்கு இல்லாமல் மனம் ஒத்துபோகாததால் 1956 ம் ஆண்டே விவாகரத்தும் ஆனது.

1958 ம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் மனோரமா அறிமுகம் செய்யப்பட்டார்.அதன் பிறகு கொஞ்சும் குமரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து அவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதிலும் குறிப்பாக தில்லான மோகனாம்பாள் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினிக்கு இணையாக பேசப்பட்டது, இன்று வரை பேசப் பட்டும் வருகிறது.

பாட்டி சொல்லை தட்டாதே, சின்ன கவுண்டர், நடிகன், மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன், சிங்கம் போன்ற படங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.

கடைசியாக அவரது 78 வயதில் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் இயற்கை எய்தினார்.இவர் கடைசியாக சிங்கம் 2 படத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.