Adani Green Energy Company:அமெரிக்க நாட்டில் நீதிமன்றத்தில் பதிவான ஊழல் வழக்கில் அதானியின் பெயர் இல்லை என தெரிவித்து இருக்கிறது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்.
கடந்த சில தினங்களாக இந்தியாவில் அதானி ஊழல் வழக்கு செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது .அதாவது,இந்தியாவில் உள்ள மாநில மின் வாரியங்களுக்கு மின்சாரம் வழங்க அதானி குழுமம் 2,100 கோடி ரூபாய் வரை ஊழல் செய்து இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் புகார்கள் எழுந்து.
மேலும் அதானி குழுமத்துடன் தொடர்பில் இருக்கும் 20 நிறுவனங்கள் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதானிக்கும் அமெரிக்கா நீதிமன்றத்தில் பதிவான ஊழல் வழக்கிற்கும் அதானிக்கு தொடர்பு இல்லை என அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் பதிவான ஊழல் புகாரில் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜாயின் ஆகியோரின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறியிருக்கிறது.
மேலும் அமெரிக்காவில் பதிவான 5 வழக்குகளில் ஒரு வழக்கில் கூட சாகர் அதானி மற்றும் வினீத்தின் பெயர் இடம்பெறவில்லை என தெரிவித்து இருக்கிறது. மேலும் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் தடுப்பு சட்டமான FCPA விதியை மீற வில்லை என தன் தரப்பு வாதத்தை முன் வைத்து உள்ளது அதானி குழுமம்.
அமெரிக்கா நீதி மன்றத்தின் புகாரை முற்றிலும் மறுக்கும் வகையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.