குங்குமம் என்பதை திருமணமான பெண்கள் மட்டும் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை குங்குமத்தை கண்டிப்பாக தினமும் வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் ஆன பெண்கள் கண்டிப்பாக நெற்றி வகட்டில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நமது முன்னோர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் அறிவியல் ரீதியான உண்மைகள் ஒளிந்து இருக்கும்.
அதேபோன்று பெண்கள் நேர் வாக்கு எடுத்து தலையை சீவ வேண்டும் என்றும் நமது முன்னோர்கள் கூறுவார்கள். தலையின் நடு பகுதி அதாவது வாக்கு பகுதி பெண்களின் கர்ப்பப்பையுடன் தொடர்புடைய ஒரு பகுதியாகும்.
திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் எந்தவித கோளாறுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், குழந்தை பெறுவதற்கு தகுதியுடைய கர்ப்பப்பையாக அந்தப் பெண்ணின் கர்ப்பப்பை மாற வேண்டும் என்பதற்காகவும் தினமும் நெற்றி பொட்டில் குங்குமம் வைப்பதன் மூலம் அந்த இடத்தை தூண்டி விட வேண்டும் என்பதற்காக தான் தினமும் குங்குமம் வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதேபோன்று ஆன்மீகம் ரீதியாகவும் பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதாவது திருமணம் ஆன பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டால் கணவனின் ஆயுள் நீடிக்கும் என்று கூறுவர். அது மட்டுமல்லாமல் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் பணவரவையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதன் மூலம் பண ஈர்ப்பு சக்தியை பெற முடியும் என்று ஆன்மீகம் கூறுகிறது. பெண்கள் அன்றாடம் சாதாரண குங்குமத்தை வைப்பதை காட்டிலும், அந்த குங்குமத்துடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால் பண ஈர்ப்பு சக்தி இரட்டிப்பாகும் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு குங்குமத்துடன் பச்சை கற்பூரத்தை கலந்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் எழுந்தவுடன் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு, அதன் பிறகு சிறிதளவு பூஜை அறையிலும், சிறிதளவு பணம் வைக்கக்கூடிய இடத்திலும் அந்த குங்குமத்தை வைத்துக் கொண்டால் பண ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதேபோன்று தொடர்ந்து 31 நாட்கள் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை இந்த மூன்று இடங்களிலும் வைத்துப் பாருங்கள் கண்டிப்பாக இதுவரை காணாத அளவிற்கு பணவரவை காண்பீர்கள். குங்குமத்துடன் இந்த பச்சை கற்பூரம் சேரும் பொழுது பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு வசிய பொருளாக அந்த குங்குமம் மாறுகிறது.