இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு!
ஜூன் மாதம் 20 தேதி தொடங்கிய சட்ட சபை கூட்டத்தொடர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பல்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களது துறைகளில் மேற்கோள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகின்றனர்.அந்த வகையில் சட்ட துறை அமைசர் ரகுபதி அவர்கள் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ,வேலூர்,விழுப்புரம்,தருமபுரி,இராமநாதபுரம்,சேலம், தேனி என மொத்தமாக ஆறு சட்ட கல்லூரிகள் உள்ளன.அதில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு என இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன.இனி வரும் 2024-2025- கல்வியாண்டு முதல் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது.குறிப்பாக முதலாமாண்டு சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 80-லிருந்து 120 ஆக அதிகரிக்கப்படும்.
இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆண்டு சட்டப்படிப்பில் 240 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பில் 240 மாணவர்களும் ஆக மொத்தம் 480 மாணவர்கள் அரசு சட்டக் கல்லூரிகளில் கூடுதலாக அனுமதிக்கப்படுவர் என கூறினார்.மேலும் பட்டறைப்பெரும்புதூரில் இயங்கி வரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் புதிதாக 5 ஆண்டு சட்டப் படிப்பும், புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் புதிதாக 3 ஆண்டு சட்டப் படிப்பும் வரும் கல்வியாண்டு அதாவது 2024-2025 முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் புதிதாக நீதிமன்றங்கள் திறக்க முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.