ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

0
22

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டு அறிக்கையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய பள்ளி மற்றும் ஐஐடி, டிப்ளமோ கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களிடமிருந்து இணைய வழியாக கடந்த பத்தாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.

அதனால் ஆர்வம் உள்ள மாணவர்கள் https://nallosai.tn.gov.in என்ற இணையதளத்தின் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மாணவர்கள் மத்திய மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலையை 6 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Previous articleநான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!
Next article2026 யில் பாஜக ஆட்சி தான்.. அதிக தொகுதிகளில் நாங்கள் தான் போட்டியிடுவோம்- அண்ணாமலை பரபர பேட்டி!!