நாடாளுமன்ற கூட்டமாக இருந்தாலும் சரி, சட்டமன்ற கூட்டமாக இருந்தாலும் சரி, அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று நினைப்பது ஆளுங்கட்சியை சார்ந்தவர்களின் வழக்கம்.
ஆனால் இதற்கு நேர் எதிர்மறையாக அது நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ எதுவாகயிருந்தாலும் கூட கூட்டம் என்று வந்துவிட்டால் அதனை சரியான முறையில் நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலைக்கு ஆளும்கட்சியினர் தள்ளப்படுவார்கள்.
இது எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. கொண்டு வரப்படுவது நல்ல திட்டமோ அல்லது தீமை விளைவிக்கும் திட்டமோ எதுவாகயிருந்தாலும், ஆளும் கட்சி சார்பாக கொண்டுவரப்பட்டால் அதனை எந்த விதமான காரணமுமில்லாமல் எதிர்ப்பதையே எதிர்க்கட்சிகள் முழுநேர வேலையாக சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும், செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சென்ற 18ஆம் தேதி ஆரம்ப சூழ்நிலையில், ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது. இதற்கு நடுவே அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணவீக்கம், போன்ற பல பிரச்சனைகளை காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றன.
வழக்கம்போல இன்று மக்களவை கூறியவுடன் அமலாக்கத்துறை நடவடிக்கை விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்புவதற்கு காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் முயற்சி செய்தார்கள். அமலாக்க துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று தெரிவித்து எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் அமளியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தலைநகர் டெல்லியில் இருக்கின்ற நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டார்கள்.
சபாநாயகர் ஓம் பிர்லா அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை தங்களுடைய இருக்கைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் மக்களவை பகல் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.