தனிக் கூட்டணி உருவாக்க போவதாக முக்கிய கட்சி தரப்பில் அறிவிப்பு…! உடைகிறதா அதிமுக கூட்டணி…!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் மாறக்கூடும் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்திருக்கின்றார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு வலுவான மாற்று கட்சியாக தேமுதிக மட்டுமே இருக்கின்றது அதை நாங்கள் நிரூபித்துள்ளோம் இப்போது எங்களுக்கு எதிரியும் அல்ல நண்பனும் அல்ல நிச்சயமாக தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் மாறும் எனவும் எங்களுக்கு தனித்து நிற்க எந்த ஒரு பயம் இல்லை நாங்கள் நினைத்தால் மூன்றாவது அணியை உருவாக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார் அதோடு விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தேர்தல் எதிர்கொள்ளும் என்று உறுதியாகத் தெரிகின்றது இருந்தாலும் முன்பே அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக தேமுதிக போன்ற முக்கிய கட்சிகளின் விருப்பம் என்ன என்பது குறித்து இன்று வரையில் தெரியவில்லை.இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தொண்டர்கள் தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்து இருக்கின்றார்.

இப்போது அதையேதான் அவர் மகன் விஜய பிரபாகரன் அவர்களும் தெரிவித்திருக்கிறார் எனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா இல்லையா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.