அவர்களுக்கு முழு உரிமை இருக்கின்றது! பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Photo of author

By Sakthi

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

சட்டசபை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி உடனே கூட்டணியை ஆளும் தரப்பான அதிமுக வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. இப்பொழுது வரை கூட்டணியில் இருந்து வருவதாகவும், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி தலைமை அறிவிக்கும் எனவும் பாஜக தெரிவித்து வருகின்றது.

அதேபோல அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் கூட்டணியின் வேட்பாளர் இல்லை என்று தெரிவித்தது பாரதிய ஜனதா. எங்களுடைய கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளரை எங்கள் தேசியத் தலைமை தான் அறிவிக்கும் என்றும், தெரிவித்தது அந்த கட்சி. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்தது அதிமுக.

இதற்கிடையே அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி .முனுசாமி இப்போதைய சூழலை பயன்படுத்திக்கொண்டு தேசிய கட்சிகள் உள்ளே நுழைய நினைப்பதாக பாஜகவை விமர்சனம் செய்தார். அதோடு கூட்டணி ஆட்சி கிடையாது அதிமுக தலைமையில்தான் கூட்டணி எடப்பாடி பழனிச்சாமி தான்
முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்க்கமாக தெரிவித்துவிட்டார்.

அதோடு எங்களுடன் தான் பாஜக கூட்டணியில் இருந்து வருகின்றது அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றார் .அதற்காக முழுமையான உரிமைகளும் அவர்களுக்கு இருக்கின்றது ஆனாலும் எங்கள் தேசியத் தலைமையின் சொல்படிதான் நாங்கள் நடந்து கொண்டிருக்கின்றோம். அதன் காரணமாக அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த ஒரு கூச்சலும் குழப்பமும் கிடையாது எனவும் அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.