திமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!

Photo of author

By Sakthi

திமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!

Sakthi

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் விதமாக பட்ட பட்ட சுவரொட்டிகளை கிழித்த திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, அங்கே வந்த திமுக கட்சியினர் அந்த சுவரொட்டிகளை அகற்றினர். இதுபற்றி ஓமலூர் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் அதிமுக சாதனைகளை சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டிய நிலையில், அதனை திமுகவினர் ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அகற்றி உள்ளனர். எனவும், அதனால் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில். ஆளும் தரப்பின் சாதனைகளை விளக்கும் விதமாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்றியதாக அந்தக் கட்சியின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து சுவரொட்டிகளை அகற்றிய திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்பட 25 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.