அதிமுக சார்பாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதன் இன்னொரு முயற்சியாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற காணொளி விளம்பரம் அனைத்து தொலைக்காட்சி தொலைக்காட்சிகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த விளம்பரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முதலிடத்தை பிடித்த மாநிலமாக திகழ்வதாக குறிப்பிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் அநேக மக்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சியில் இந்த விளம்பரங்கள் அதிகமாக ஒளிபரப்பப படுகின்றது.
திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்காட்சி அலுவலகம் முன்னரே திமுகவின் தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் தான் இயங்கி வந்தது.
மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சன் தொலைக்காட்சிக்கு மாற்றாக திமுக சார்பில் அதிகாரபூர்வமாக கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் தமிழக அரசின் சாதனை விளம்பரங்கள் தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றார். தர்மபுரி மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார் இது தொடர்பாக இன்றைய தினம் தன்னுடைய வலைப்பதிவில் அவர் சேற்றில் ஒரு கால் ஆற்றில் ஒருகால் என்ற தலைப்பில் எழுதி இருக்கின்றார்.
சன் தொலைக்காட்சி மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இருக்கலாம் ஆனாலும் கருணாநிதியின் உடன் பிறப்புகள் மற்றும் நம்முடைய தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டர்கள் இவற்றை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள போவதில்லை அதிமுக விளம்பரங்களை வெளியிட்டு பணம் பாருங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என்று செந்தில்குமார் போட்ட பதிவு சமூக வலைதளங்களில் திமுகவினரால் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
முன்னரே கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் மாறன் சகோதரர்களுக்கும்.திமுக தலைமைக்கும், ஏற்பட்ட மனக்கசப்பு பெரிய சர்ச்சையாக மாறியது. இப்பொழுது சில திமுகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் ஆரம்பித்து வைத்த இந்த எதிர்ப்பை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னெடுத்து வருகின்றார்.