அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் 7 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க வின் முன்னால் எம்.பி. சத்தியபாமா-வும் தனது பதவியை ராஜினாமா செய்யயுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று அவரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க-வின் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்பொது சத்தியபாமா-வும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் பலரும் தங்களையும் பதவியில் இருந்து நீக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளை சேர்ந்த சுமார் 2000 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் வேண்டுகோளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கலாம் இருப்பது, அவர் தலைமையின் மீது அவருக்கு இருக்கும் பயத்தை காட்டுகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க வரும் சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்க முடியாத தோல்வியை தழுவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.