A.D.M.K: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி-யின் தலைமையை ஏற்க விரும்பாத சில முக்கிய தலைவர்கள் குறிப்பாக டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பை தேடி வருகின்றனர். இ.பி.எஸ்-யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று டி.டி.வி தினகரன் கூறி இருந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகம் இருப்பதால் செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்துவார்களா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. பிரிந்த குழுக்களை இணைக்கும் திறன் அவரிடம் அதிகம் உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதற்கு தடையாக இருப்பது இ.பி.எஸ் தான். ஏனென்றால் கட்சியின் அதிகாரம், சட்டபூர்வ அங்கீகாரம் தற்போது அவர் கையில் தான் உள்ளது.
எனவே தலைமை மாற்றம் உடனடியாக நிகழ வாய்ப்பு இல்லை. இ.பி.எஸ் தலைமையில் அதிமுக செல்லும் பட்சத்தில் பிரிந்த குழுக்கள் தனித்தனியாக செல்லலாம். மாறாக செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர் ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதிமுக-வின் தலைமை மாற்றமே அடுத்த தேர்தலில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இ.பி.எஸ் ஒதுங்கினால் தான், செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளராகவும், பிரிந்த அணிகள் ஒருங்கிணையவும் முடியும். இல்லையென்றால், அதிமுக பிரிந்த நிலையிலே தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இது எடப்பாடி-யின் தலைமைக்கு ஆபத்தாக மாறுவதோடு, அதிமுக சட்டமன்ற தேர்தலிலும் பின்னடைவை சந்திக்கும் என்றும் கூறுகின்றனர்.