எம்எல்ஏ செய்த காரியத்தால்! நெகிழ்ந்து போன முதியவர்!

0
185

ஒரு ஆட்டோ விபத்தில் காயமடைந்த முதியவருக்கு வேடசந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் முதலுதவி அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் இவர் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வேடசந்தூரில் இருந்து அய்யலூர் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயம் தண்ணீர் பந்தம் பட்டி என்ற பகுதியில் ஒரு ஆட்டோ ஒரு முதியவர் மீது மோதி இருக்கின்றது இதில் பலத்த காயங்களுடன் அந்த முதியவர் ரோட்டில் கிடந்த இருக்கின்றார்.

அப்போது அந்த வழியாக பயணம் மேற்கொண்டு இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடனே தன்னுடைய காரில் இருந்து இறங்கி, அந்த முதியவருக்கு முதலுதவி செய்த பின்பு அவரை ஆட்டோவில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுப்பி வைத்திருக்கின்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் முதலில் ஒரு மருத்துவர் என்பதை இந்த நேரத்தில் நிரூபித்து காட்டிவிட்டார் என்று மக்கள் பலரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleஎல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!
Next articleதிமுகவின் முக்கிய வாரிசுக்கு முற்று புள்ளி வைத்த பிகே டீம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!