விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

Photo of author

By Sakthi

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பது உள்ளிட்டவற்றை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டிக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவின் சார்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம் சி சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திமுக அரசை கண்டிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதோடு இன்று காலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையமருகே அதிமுகவைச் சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சக்கரபாணி, அர்ஜுனன் ,உள்ளிட்ட பலரும் பங்கேற்று கொண்டார்கள்.