அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு! அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!

Photo of author

By Sakthi

பாமகவும், தேமுதிகவும், கூட்டணி ஆட்சியில் முன்னெடுத்து வரும் நிலையில் பாஜகவும், கூட்டணி ஆட்சியை எதிர்பார்ப்பதாக தெரிகின்றது இந்த நிலையில் கூட்டணி ஆட்சி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்.

மே மாதம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

திமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், அதிமுக சார்பாக, களம் காணவும், அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவும், கடும் போட்டி நிலவி வருகின்றது. என்ற பேச்சு எழுந்த வண்ணம் இருக்கின்றது.

தொடர்ந்து பத்து வருட காலமாக ஆட்சியில் இருக்கும் ஒரு அரசின் மீது அதிருப்தி இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

மக்களுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு இந்த நற்சான்றிதழ் வாங்கி இருக்கின்றது.

இதன் காரணமாக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக பல போட்டிகள் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

வடசென்னையின் முக்கிய அதிமுக நிர்வாகியிடம் இது சம்பந்தமாக பேசியபோது, எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசையால் ஆளும் கட்சியினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

ஆனால் இதெல்லாம் வெற்றுக் கூச்சல் என்பதற்கு அதிமுக அரசு மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையும் மக்கள் அதிமுக அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் சாட்சியாக விளங்குகிறது. கூட்டணி சரிதான் ஆனால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றார்.

கூட்டணியில் விரிசல் என பேசியது குறித்து அவரிடம் கேட்டபோது, தேர்தல் பேரத்தை அதிகரிப்பதற்காக தான், கூட்டணி ஆட்சி என்ற கோஷங்களை சில கட்சிகள் எழுப்பி வருகின்றார்கள்.

தொடர்ச்சியாக ஊடகங்களில் இது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது நான் திமுக கூட்டணியில் விரிசல் என்பது இல்லை அது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.