தமிழகத்தின் முதல்வர் யார் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்! ஸ்டாலின் உற்ச்சாகம்!

0
127

அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் பிரிந்து விடுவார் என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கின்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார் ஸ்டாலின். அதேபோல ராணிப்பேட்டை மாவட்டம் ஆனந்த மலை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று அங்கே பொதுமக்கள் தங்களுடைய தேவைகளையும், குறைகளையும், அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பலகையில் கையெழுத்திட்டனர்..

ஜெயலலிதா ஆட்சி என அவருடைய பெயரை தெரிவித்து இன்று கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள் என்பதே உண்மை வெளிவேஷதிற்காக மக்களை ஏமாற்றுவதற்காக அந்த புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை பெற்று தரப்படும் என்று உறுதியளித்தார்.

நான்கு மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது என்பதை மனதில் வைத்துத்தான் பொங்கலுக்காக 2500 ரூபாய் கொடுக்க இருக்கின்றோம் என்று அறிவித்திருக்கிறார்கள். என்று தெரிவித்த ஸ்டாலின் அதனை அதிமுக பணத்தைப் போல முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், போன்றவர்களின் படத்தை போட்டு டோக்கன் கொடுத்து வருகிறார்கள். பொங்கல் பரிசை நாங்கள் தடுக்கிறோம் என்று முதல்வர் தெரிவிக்கின்றார். நாங்கள் அதனை தடுக்கவில்லை நியாயமாக கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கின்றோம் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எப்படி 39 இடங்களுக்கு 38 இடங்களில் வெற்றியடைந்தோமோ, அதேபோல 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி அடைய போகின்றது. என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது என்று தெரிவித்ததோடு அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவருக்கும் பெரிய யுத்தமே நடந்தது அதன் காரணமாக ஒன்று சேர்ந்து உட்கார்ந்து பேசி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்திருக்கிறார்கள். கடந்த இரு நாட்களாக வேறு ஒரு செய்தியும் வந்து கொண்டிருக்கின்றது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக மோடி, மற்றும் நட்டா ஆகியோர்தான் தேர்வு செய்ய வேண்டும் இன்று அமைச்சர்களே தெரிவித்து வருகிறார்கள்.

ஆகவே எப்பொழுது பன்னீர்செல்வம் அந்த கட்சியில் இருந்து தனியே பிரிய போகின்றார் என்று தெரியவில்லை .எப்பொழுது அதிமுக இரண்டாக உடைய போகிறது என்று தெரியவில்லை. ஆனாலும் நிச்சயமாக அதிமுக உடையும். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்று மக்களே முடிவு செய்துவிட்டார்கள் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

Previous articleரஜினியின் முடிவை வரவேற்ற துணை முதல்வர்!
Next articleகடன் தொல்லையால் விபரீத முடிவு!