ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைய இருக்கின்ற புதிய அரசு குறித்து அறிவிப்பை தாலிபான்கள் என்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்ற 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தாலிபான் அரசு போல இது இருக்காது எனவும், ஒரு சில மாற்றங்கள் இருக்கும் எனவும், அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசின் கீழ் பணியாற்ற உரிமை கோரி நேற்றையதினம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டத்தில் இறங்கினார்கள்.
கடந்த 20 ஆண்டு காலமாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை அடுத்து புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தாலிபான்களை ஈடுபட்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் உச்சபட்ச தலைவராக ஹெய்பத்துல்லாஹ் அகும்ஜதா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் எப்போதும்போல வேலைக்கு செல்லலாம் எனவும் அதே சமயத்தில் புதிய அரசில் பெண்களுக்கு இடம் இருக்காது எனவும், முக்கிய பதவிகளில் அமர்த்த மாட்டார்கள் எனவும், தாலிபான்களின் மூத்த தலைவர் முகமது அப்பாஸ் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து புதிய அரசின் கீழ் பணியாற்றுவதற்கு உரிமை வேண்டும் என்று தெரிவித்து நேற்றைய தினம் 50க்கும் அதிகமான பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இஸ்லாமியத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசு இயங்கும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. ஈரான் நாட்டில் இருப்பது போல ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைய இருப்பதாக தாலிபான்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது நாட்டின் உச்சபட்ச தலைவர் நியமிக்கப்பட்டு அவர் அரசியல் மற்றும் மத ரீதியான விவகாரங்களுக்கு தலைவராக செயல்படுவார். அவருக்கு கீழ் அதிபர் அல்லது பிரதமர் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், உட்சபட்ச தலைவர் பதவி தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஹெபத்துல்லாஹ் அகுன் ஜாதாவுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில் ஹெல்மெட் மாகாணத்தில் ராணுவத்தின் மீது தாலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள் தற்கொலை படை தாக்குதலை முன்னின்று நடத்தியது. அகுன் ஜதாவின் மகன் அப்துர் ரகுமான் இருபத்தி மூன்று வயது உடைய அவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். அவருடன் சேர்ந்து மேலும் 6 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் இந்த சம்பவம் தான் தாலிபான்கள் இடையே அவருடைய செல்வாக்கை அதிகரித்திருக்கிறது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசனை ஈடுபட்டபோது அகுன் ஜதா பங்கேற்றாலும் நபர் குறித்த காட்சிகளும், புகைப்படங்களும், வெளியிடப்படவில்லை. தாலிபான்கள் அமைப்பின் நிறுவனர் முல்லா ஓமர் போன்ற இவரும் யாராலும் அறியப்படாதவர் இவருடைய ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் தாலிபான்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தாலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவர் முல்லா வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கின்ற புதிய அரசு எல்லோருக்குமான அரசாக இருக்கும் என்று தாலிபான்கள் கூறியிருந்தார்கள். ஆட்சி அமைப்பதில் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்றைய தினம் மதிய தொழுகைக்குப் பின்னர் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை அவர்கள் வெளியிடலாம் எனவும், தகவல் கிடைத்திருக்கிறது போர்கள் காரணமாக விழுந்து இருக்கின்ற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதத்தில் புதிய அரசு அமையுமா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.