45 வருட காத்திருப்பில், 70 வயது பெண்ணுக்கு கடவுள் தந்த நம்பிக்கை! வைரல் புகைப்படம்!
பொதுவாக ஒரு புதுமண தம்பதி என்றாலே அவர்களது வாழ்கையில் அடுத்த கட்டம் என்பது குழந்தை பேறு தான். ஆனால் இது ஒரு வரம். அனைவருக்கும் இது கிடைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தற்போதெல்லாம் பலர் இந்த காரணத்தினால் அவதியுறுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில், உணவு பழக்க வழக்கம் மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் குழந்தைபேறு பாக்கியம் பலருக்கு தள்ளி போகிறது. அதன் காரணமாக வீதிக்கு வீது ஐ.வி.எப் சிகிச்சை மையங்கள் தோன்றி மக்களிடம் இருந்து கணிசமான தொகையை கறந்து விடுகின்றனர். ஆனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அந்த மையங்கள் மிகப்பெரும் வரப்பிரசாதம் தான்.
அப்படி ஒரு சம்பவம் தான் குஜராத் மாநிலத்தில், கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகலுக்கும் நடந்துள்ளது. ஜிவுன்பென் ரபாரி(வயது 70) – வல்ஜிபாய் ரபாரி(வயது 75) வயதான இந்த தம்பதிக்கு திருமணமாகி 45 ஆண்டுகளுக்கு முடிவுற்றது. ஆனால் இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. தற்போது உறவினர் ஒருவரின் மூலம் ஐ.வி.எப் ஆய்வு எனும் நவீன செயல்முறை சிகிச்சை பற்றி அறிந்து, வயதான பிறகும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பி, அவர்கள் இருவரும் ஐ.வி.எப் மையத்தை நடத்தும் டாக்டர் நரேஷ் பானுஷாலியை அணுகியுள்ளனர்.
முதலில் இந்த வயதில் அதெல்லாம் கஷ்டம் என்று தான் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவர்களின் விருப்பத்தினால் அவர்களுக்கு விட்ரோ கருத்தரித்தல் மூலமாக சிகிச்சை அளித்து உள்ளனர். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தையையும் தற்போது பெற்றுள்ளனர். வயதான நிலையிலும் குழந்தை பெற்றவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குழந்தையுடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த 74 வயதான மங்கை அம்மா என்பவர் ஒரு நன்கொடையாளர் இன் உதவியுடன் அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே எதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.