“மஞ்சள் வீரன்” டிராப் அவுட் “ஐபிஎல்”-லில்  நியூ என்ட்ரி!! டிடிஎஃப் வாசன் நடிக்கும் படத்தின் அப்டேட்!!

Photo of author

By Sakthi

TTFVASAN:பிரபல யூடியூப் டிடிஎஃப் வாசன் “மஞ்சள் வீரன்” படத்தில் இருந்து வெளியேற்றியதை  தொடர்ந்து  “ஐபிஎல்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டிடிஎஃப் வாசன் தமிழகத்தை சேர்ந்த  பிரபல யூடியூபர் ஆவார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அந்த பயணத்தில் ஏற்பட்ட சுவாரசியமான அவற்றை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வார். இதன் மூலம் கிட்டத்தட்ட 40 லட்சத்து 75 ஆயிரம் சப்கிரைபர்களை தனது யூடியூப் சேனலில் வைத்து இருக்கிறார். குறிப்பாக 2K கிட்ஸ் அதிக அளவில் டிடிஎஃப் வாசனை பின்பற்றுகிறார்கள்.

இவர் 36 மணி நேரத்தில் கன்னியாகுமரி குமரி முதல் லடாக் வரை நான் ஸ்டாப்பாக பைக்கை இயக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறார். இது போன்ற பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இருப்பினும் பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனத்தை இயக்குவது. அதிவேகமாக இருசக்கர வாகனம் இயக்குவது என பல வழக்குகள் தமிழக போலீசாரால் போடப்பட்டுள்ளது. மேலும் இவர் இருசக்கர வாகனம் இயக்க கூடாது என அவரது ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில் தான் இயக்குனர் செல்லம் இயக்கத்தில் “மஞ்சள் வீரன்” படத்தில் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் தொடர்பான போஸ்டர் இணையதளத்தில் வெளியானது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் “மஞ்சள் வீரன்”  படத்தில் டிடிஎஃப் வாசன் விலக்கப்பட்டுள்ளார். என்ற அதிர்ச்சி தகவலை இயக்குனர் செல்லம் வெளியிட்டார்.

இது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில் மீண்டும் டிடிஎஃப் வாசன் IPL (இந்திய தண்டனை சட்டம்) என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை   இயக்குனர் வெற்றிமாறன் உதவியாளர் கருணாகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆடுகளம் கிஷோர், குஷிதா,சிங்கம்புலி ,ஆடுகளம் நரேன் ,ஹரிஷ் பேரடி, போஸ் வெங்கட் என பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இயக்குனர் கருணாகரன் IPL படத்தை பற்றி கூறுகையில் இந்த படம் ஒரு குடும்பபட்மாக அமையும் என்று கூறினார்.