ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேச நாடுகள் பட்டியலில் இணைவதற்கு ஆர்வமாக இருந்து வருகிறது. அதனை ஆதரிக்கும் விதமாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது..
இதனை எதிர்க்கும் விதமாக கடந்த 24 ஆம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது கடந்த 24 ஆம் தேதி தொடர்ந்த போர் தற்போது 19-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட இரு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்தநிலையில், உக்ரைன் நகரங்கள் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிவதை தடுக்க உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நேச நாடுகளை உக்ரைன் அதிபர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனாலும் அப்படி செய்தால் ரஷ்யாவுக்கும் நேற்று நாடுகளுக்கும் நேரடி போது ஏற்படும் என்று தெரிவித்து நேச நாடுகள் அதனை அறவே மறுத்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்டிருக்கின்ற ஒரு சமூக வலைதளம் வீடியோ பதிவில் கடந்த வருடம் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் எதுவுமில்லையென்றால் ஒரு போரை அந்த நாடு ஆரம்பிக்கக் கூடும் என்று நேட்டோ தலைவர்களுக்கு நான் தெளிவான எச்சரிக்கை விடுத்தேன் நாங்கள் சொல்வது சரிதான் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, நான் மீண்டும், மீண்டும், சொல்கிறேன் நீங்கள் எங்களுடைய வானத்தை மூட வில்லையானால் ரஷ்ய ஏவுகணைகள் உங்களுடைய பிரதேசத்தில் விழுவதற்கு சற்று நேரம் கூட ஆகாது நேட்டோ பிரதேசம், நேட்டோ நாடுகளின் குடிமக்கள் வீடுகளில் ரஷ்ய ஏவுகணைகள் பாயும் என்று தெரிவித்தார்.