Ajith Kumar:குட் பேட் அக்லி படப்பிடிப்பு முடிந்தவுடன் ரேஸிங்கில் களம் இறங்கு அஜித் குமார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பு மட்டும் அல்லாது பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்கிறார். ரேஸ் போட்டிகளில் பங்கு பெறும் வருகிறார். இது போன்ற ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்ட அவருக்கு விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது உடலில் அதிகமாக அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. இருந்த போதிலும் தனது ரசிகர்களுக்காக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அஜித் குமார் “Venus motorcycle tours” என்ற சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தான் தற்போது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. மேலும் படப்பிடிப்பு நவம்பர் 24 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
இதனால் நவம்பர் 27 ஆம் தேதி முதல் அஜித்தின் ரேஸிங் அணி தீவிர பயிற்சி மேற்கொள்ள போவதாக “Venus motorcycle tours” நிறுவனம் தனது இன்ஸ்டா பதிவு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.