சிலை கடத்தல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற காவலர் பொன்மாணிக்கவேல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி??

Photo of author

By Pavithra

காவல் துறைத் தலைவராக இருந்த பொன்மாணிக்கவேல் சில ஆண்டுகளாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றார். வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்ட ஏராளமான தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பழைமையான மற்றும் மிக விலை உயர்ந்த கோவில் சிலைகளைக் கடத்தப்படுவதை தடுத்தும், கடத்திய சிலைகளை கண்டறிந்து மீட்டும் வந்தார்.இவரின் சிறப்பான மற்றும் நேர்மையான செயல்களினால் தமிழக மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார் என்றே கூறலாம்.

சில நாட்களுக்கு முன் தஞ்சாவூருக்கு வந்த
பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணத்தால் வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவரின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.