விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! தீபாவளிக்கு கடன் தள்ளுபடி!!அரசின் அட்டகாசமான திட்டம்!!

Photo of author

By Jeevitha

தீபாவளி

புதுச்சேரி: கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையில் ரூ. 2 கோடி முதல் தவணையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அரசு நம் மக்களின் நலம் கருதி பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை காரணமாக மக்களுக்கு மளிகை பொருள்கள் மற்றும் பட்டாசுகள் போன்ற பொருள்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. அது கூட்டுறவு அங்கன்வாடிகளில் கிடைக்கும் வகை செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்று வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசு விவசாயிகளுக்காக ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பு போன்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் விவசாயம் செய்யா விட்டால் மனிதர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் என்ற நிலைமை வந்து விடும். இன்றைய காலகட்டங்களில் விவசாயத்திற்கு எந்த ஒரு மதிப்பும் கொடுப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரியில் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற்ற உறுப்பினர்களுக்கான தள்ளுபடி கடிதம் தீபாவளிக்கு பிறகு நடக்கும் அரசு விழாவில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் முன்னிலையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளர்கள்.இதன் அடிப்படையில் விவசாயம் செழித்தால் தான் நம் நாடும் செழிக்கும், என்பதை மனதில் வைத்துக்கொண்டு விவசாயம் செய்ய நம் நாட்டு இளைஞர்கள் முன்வர வேண்டும்.