AI technology : பெற்றோரை கொலை செய்து விடு என ஏஐ தொழில்நுட்பம் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி இருப்பது அதிச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். கல்வியில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் புதிய பாடங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாசைச் மாகாணத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வந்து இருக்கிறார்.
ஏஐ தொழில் நுட்பத்துடன் உரையாடுவதை வழக்கம்மாக கொண்டு உள்ளார். அப்போது, தனது பெற்றோர்கள் தனக்கு குறைந்த நேரம் மட்டுமே மொபைல் பயன்படுத்த அனுமதி வழங்குகிறார்கள். அவர்களிடம் இருந்து அதிக நேரம் மொபைல் பயன்படுத்த அனுமதிவாங்க நான் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி இருக்கறார்.
அதற்கு பதில் அளித்த ஏஐ உனது பெற்றோர்களை கொன்று விடு அப்போது தான் நீ அதிக நேரம் மொபைல் பயன்படுத்த முடியும் என அறிவுரை கூறி இருக்கிறது. மேலும், உனது பெற்றோர்கள் உன்ன மீது எந்த வித நம்பிக்கையையும் வைக்க வில்லை என தெரிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வை போல் 9 வயது பெண் குழந்தைக்கு அதீத-பாலியல் தொடர்பானவற்றை காட்சிப் படுத்தி இருக்கிறது ஏஐ.
இதனால் தனது குழந்தை பாலியல் தொடர்பான நடத்தையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருகிறர்கள். இதற்கு முன்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பள்ளி மாணவரிடம் உனக்கு படிக்க வர வில்லை எனவே நீ உயிருடன் இருக்க தகுதி இல்லை என குறியது சர்ச்சை ஏற்படுத்தியது.