ADMK BJP: அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே சச்சரவு நிலவி வருகிறது. ஆனால் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவும், பாஜகவும் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இந்த கூட்டணியை விரிவுபடுத்துவதற்காகவும், வெற்றி பெறுவதற்காகவும், பாஜகவின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இபிஎஸ்யை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக தொகுதி பங்கீடு குறித்தும், அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இபிஎஸ் பாமக நிறுவனர் ராமதாசிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரேமலதா எப்போதும் தன்னுடைய பிரச்சாரத்தில் அதிமுகவை வஞ்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அண்மையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவையும், தவெகவையும் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார். இது அவர் அதிமுகவில் இணைவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது.
மேலும் தமமுக-விடமும் கூடிய விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இதனால் இந்த கட்சிகளனைத்தும் அதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அது நிச்சயம் தேர்தலில் வெற்றி பெரும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.