ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களிலும், தொகுதி பங்கீட்டிலும் மும்முரமாக உள்ளன. அந்த வகையில் அதிமுகவும் இந்த வேலைப்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இபிஎஸ்க்கு உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்க்கே அதிக நேரம் தேவைப்படுகிறது. இபிஎஸ் அதிமுகவின் தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே முக்கிய தலைவர்களின் பிரிவும், இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது தான் செங்கோட்டையனின் நீக்கம்.
செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின், அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. செங்கோட்டையனின் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அது இபிஎஸ்க்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் தான் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது செங்கோட்டையன் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இவருடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இணைய உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஜெயக்குமாருக்கு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் துளியும் விருப்பமில்லை.
மேலும் செங்கோட்டையன், அதிமுகவிலிருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலர் இன்னும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக கூறியிருந்தார். அந்த மூத்த அமைச்சர் ஜெயக்குமராக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக, இவர்கள் இருவரும், ஒன்றாக இணைந்து இபிஎஸ்யை வீழ்த்தும் நோக்கில் திமுகவில் இணையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக என கூறப்படுகிறது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த செய்தி உண்மையானால் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் முக்கிய முகமாக அறியப்படுவதால், அங்கு அதிமுகவின் வாக்கு வங்கி பாதியளவு சரிய கூடும் என மதிப்பிடப்படுகிறது.

