இதை செய்யவில்லை என்றால் நாம் வெற்றி பெற இயலாது! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு!

0
231

விழுப்புரம் மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது, இதில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அமைப்பு தேர்தலில் கிளைக் கழகச் செயலாளர்கள் ஒன்றாக இணைத்து செயல்பட்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும் நீங்கள் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். காலியாக இருக்கின்ற இடங்களில் புதிதாக இருக்கின்ற இளைஞர்களுக்கு வாய்ப்பாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வருடங்களும் இருக்கிறது. பொதுமக்களின் மனதில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி தான் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்து வாக்களித்து விடுவார்கள்.

இதன் காரணமாக, சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பொதுமக்கள் ஆளும் கட்சியின் மீது இருக்கின்ற கோபத்தை வெளிப்படுத்தி நமக்குத் தான் வாக்களிப்பார்கள், ஊராட்சி கிளை கழகத்தை பலப்படுத்தினால் தான் நம்முடைய அமைப்பு வலுவான நிலையில் இருக்கும், கிளை கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் 50 கோடி ரூபாய் செலவு செய்தாலும் ஒரு இடத்தில் கூட நம்மால் வெற்றி பெற்றுவிட இயலாது என்று உரையாற்றியிருக்கிறார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக சார்பாக நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் குட்டி கதை ஒன்று தெரிவித்து சசிகலாவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக தெரிவித்து சர்ச்சையை உண்டாக்கினார். இந்த சூழ்நிலையில், திமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் இந்த பேச்சு அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது.

Previous articleபிரதமரின் தமிழக வருகை! உடன்பிறப்புகளுக்கு முக்கிய கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
Next articleஅட ஆண்டவா இதென்ன சோதனை? உதயநிதியை பதம்பார்த்த நீதிபதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here