அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

Photo of author

By Sakthi

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

Sakthi

நாமக்கல் மாவட்டம் முன்னாள் சட்டசபை உறுப்பினர் கே பி பி பாஸ்கர் மற்றும் அவருக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது. நாமக்கலில் 24 மற்றும் மதுரை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இடம் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடைபெற்ற வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து அதிமுகவின் முதலமைச்சர் சோதனை செய்து அதில் பலர் ஆதிருப்தியிலிருந்து வருகிறார்கள்.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி போன்றோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகளில் மட்டுமல்லாமல் அலுவலகங்கள் போன்ற பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

பாஸ்கர் பணியிலிருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறார்கள்.