ADMK DMK: அதிமுகவின் கோட்டை என்றாலே நம் நினைவிற்க்கு வருவது சேலம் மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி தான். சேலம் எடப்பாடி பழனிசாமியின் பூர்விகம் என்பதால் இங்கு காலூன்ற முடியாது என்பதை அறிந்த திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த 25 வருடங்களாக அதிமுக தான் இங்கு நிலை பெற்று வருகிறது.
அதிலும் 2011 தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தல் வரை அங்கு அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜு தான் வெற்றி பெற்று வருகிறார். இதனை உடைத்து திமுகவை தக்க வைத்து கொள்ள வேண்டுமென நினைத்த ஸ்டாலின் திமுக அமைச்சர் மூர்த்தி & கோ விற்க்கு மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியை திமுக வசம் ஆக்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் பேரில் செயல்பட்டு வரும் மூர்த்தி & கோ மக்களை கவர்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
முக்கியமாக மக்களுக்கு இலவசமாக பல்வேறு பொருட்களை வழங்கி வருகிறது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட பயந்த செல்லூர் ராஜு வேறு தொகுதியில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் அதிமுக என்னசெய்வதென்று தெரியாமல் திணறி வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருப்பதால் மக்கள் அக்கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் மதுரை மேற்கு தொகுதியில் திமுக காலூன்றி விட்டால், அதிமுக சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர் .