அதிமுகவின் பொதுக்குழுவும்! நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வைத்த வாதங்களும்!

0
146

அதிமுக தற்போது இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என பிரிந்து இருதரப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அப்படி செயல்பட்டு வரும் அதிமுகவின் இரு தரப்பினரும் சட்டப் போராட்டத்திற்கிடையே பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், இந்த பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று நீதிமன்றங்களில் நிகழ்ந்த பரபரப்பான வாக்குவாதங்கள் தொடர்பாக தற்போது நாம் காணலாம்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்த அந்த கட்சியின் உறுப்பினர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கு ஜூன் மாதம் 22ஆம் தேதி தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் மனுதாரர்கள் தரப்பில் பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சியினரல் வெளியிடப்படவில்லை எனவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு பதவிக்காலம் இருக்கின்ற நிலையில், ஒற்றை தலைமை தொடர்பாக பொதுக்குழுவில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றவிருக்கும் 23 தீர்மான்ங்களுக்கும் ஒப்புதல் வழங்கியதாகவும், இதை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாத என்றும் வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் எதுவும் அறிவிக்கப்பட மாட்டாது என்றும் முந்தைய காலங்களில் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது என்றும், குறிப்பிட்டார்கள். அதோடு கட்சி விதிகளை திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்கள்.

மேலும் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை கட்சி தான் முடிவு செய்யும் எனவும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், கூறிய நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து சி.வி சண்முகம் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த வடக்கு நள்ளிரவு 2 மணியளவில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் ஒற்றை தலைமையை ஏற்றுக் கொண்டால்தான் பொதுக்கூட்ட பாஸ் வழங்கப்படும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், சிவி சண்முகம் தரப்பில் கூறப்பட்டது.

விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றுவதாக இருந்தாலும் அதன் மூலமாக பொதுக்குழு உறுப்பினரான மனுதாரருக்கு எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படப்போகிறது என்று நிரூபிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் செய்தது.

இந்த விசாரணையின் முடிவில் பொதுக்குழு நடத்தலாம் எனவும், 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம் எனவும், மற்ற விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கலாமே தவிர எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

இதன் பின்னர் ஜூலை மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என தன்னுடைய ஒப்புதலில்லாமல் அறிவிக்கப்பட்ட கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த சமயத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் இருக்கிறதா? எத்தனை நாட்களுக்கு முன்னர் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடுவது யார்? என்பது தொடர்வாக விரிவான பதில் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு வழங்கிய பதிலில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒலித்துறை கட்சியின் அடிப்படை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் என கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது எனவும், அதற்கு ஜூன் மாதம் 23ஆம் தேதி பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்படாததால் 2 பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்கள்.

தற்காலிக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சசிகலா சிறைக்கு சென்ற பிறகு 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக்கான நோட்டீஸ் தலைமை கழக நிர்வாகிகளால் தான் அனுப்பப்பட்டது எனவும், விளக்கமளித்தார்கள்.

அதோடு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்தால் தான் 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும், சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு நோட்டீஸ் அவசியம் இல்லை எனவும் பதிலளித்தார்கள்.

இதற்கு பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதி ஆகிவிட்டதாக முன்வைத்த வாதம் தவறு எனவும், ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் காலியாக இருப்பதாக எவ்வாறு தெரிவிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை எனவும், திருத்தம் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது என்ற காரணத்தால், ஒப்புதல் என்பது வழக்கமான நடைமுறைதான் எனவும், கூறியிருந்தார்கள்.

தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலியாக இருப்பதாக கருத முடியும் எனவும், சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும் கூட கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் கூட்ட வேண்டும் எனவும், விளக்கமளித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று காலை 9 மணியளவில் வழங்கப்படும் என்று தள்ளி வைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

Previous articleநீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!
Next articleம்ம் சீக்கரம் ஆகட்டும் கெலம்புங்கள்!!அதிமுக இறுதி தீர்ப்புக்கு ?..