TVK ADMK: 2026யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசியல் களம், எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு கட்சிகளை நோக்கி சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் புதிய புதிய திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் அமைந்தது தான் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை, விஜய்யின் அரசியல் வருகை. விஜய்யின் கட்சி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், கரூர் சம்பவம் அதனை தலைகீழாக மாற்றியது.
ஆனால் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் விஜய்க்கு சாதகமாவே அமைந்தது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக இணைவது உறுதியாகி விட்டது. பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கவில்லை என்றால் அந்த பணியை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்ள வேண்டி வரும் என கூறிய செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை தவெகவில் இணைப்பதற்கான பணியை மும்முரமாக செய்து வருகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே பாஜகவின் மூத்த மாநில தலைவராக இருந்த சாமிநாதன் தவெகவில் இணைய போவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது இந்த செய்து மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட போதே அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்காணோர் கட்சியிலிருந்து விலகினார். அதோடு சத்ய பாமா போன்ற முக்கிய முகங்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். செங்கோட்டையனுக்கு ஆதரவாளர்கள் அதிகளவில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரும், தவெக இணைந்தால் அது தவெகவுக்கு இரட்டிப்பு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

