தவெகவில் இணையும் அதிமுக தலைவர்! இ.பி.எஸ்க்கு புதிய அதிர்ச்சி?

0
84
AIADMK leader joins Thaveka! A new shock for EPS?
AIADMK leader joins Thaveka! A new shock for EPS?

ADMK TVK: அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி, தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக அவர் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவர் திமுக அல்லது தவெக உடன் இணையும் முயற்சியை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புதிய கட்சிகளை தேடி தங்கள் அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் புகழேந்தியும் தவெக இணைந்தால் அது அக்கட்சிக்கு வலுவான ஆதரவை அளிக்கக்கூடும். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் தவெகவில் இணையவில்லை.

ஆனால், எம்ஜிஆர், அண்ணா போன்ற திராவிட தலைவர்களை முன்னிலைப்படுத்தும் விஜய்யை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும், விஜய்யின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது. அவர் பின்னால் செல்லும் கூட்டம் பலருக்கு பாதகமாக மாறும் என்றும் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இவர் தவெகவில் இணையப் போகிறார் என்பதற்கு ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது தவெகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் என மதிப்பிடப்படுகிறது. புகழேந்தி தவெகவில் இணைய உள்ளார் என்ற தகவல் உறுதியாகும் பட்சத்தில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தவெக புதிய வளர்ச்சியை அடையும் வாய்ப்பு அதிகம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleநீக்கப்பட்டவர்களின் அடுத்த நகர்வு என்ன? கூட்டணியா அல்லது தனித்த பாதையா? தொடரும் கேள்விகள்!
Next articleபுகழேந்தியின் புதிய பாதை! கவலைக்கிடமான நிலையில் அதிமுக..