Breaking News

அதிமுக என்றால் இரட்டை இலை தான்.. இபிஎஸ் அல்ல!! உண்மையை உணர்ந்த இபிஎஸ்!!

AIADMK votes fall in Kongu region.. Activists upset by EPS action!!

ADMK: தமிழக அரசியலில் அதிமுக மீண்டும் உயிர்பெறும் சூழலில் உள்ளது.  இந்நிலையில் மக்களின் வாக்கு இரட்டை இலை சின்னத்துக்கே, இபிஎஸ்க்கு அல்ல என்ற கருத்து தற்போது தீவிரமாக பேசப்படுகிறது.  இபிஎஸ் தலைமையில் கட்சி இயங்கி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவரின் தனிப்பட்ட தாக்கம் குறைந்து விட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2021 தேர்தலில் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் மக்கள் வாக்கு குறைந்தது, பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் கூட அதிமுக முன்னிலை பெறாதது, இபிஎஸ் மீது நம்பிக்கை குறைந்ததற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரட்டை இலை என்ற சின்னம் தமிழக மக்களின் மனதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அடையாளமாக இன்னும் உறுதியாய் நிலைத்திருக்கிறது. அது தான் வாக்காளர்களின் உணர்ச்சி. இபிஎஸ் உடன் இணைந்த பல மூத்த தலைவர்கள் வெளியேறியிருப்பதும், செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தனி அணிகள் உருவாக்குவதும் கட்சிக்குள் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் இபிஎஸ்க்கு வாக்களிக்கவில்லை, இரட்டை இலையை பாதுகாப்பதற்கே வாக்களிக்கிறோம் என்ற மனநிலையுடன் உள்ளனர் என்ற அரசியல் வட்டாரங்களின் கருத்து வலுப்பெறுகிறது. இதை உணர்ந்த இபிஎஸ், கட்சியின் அடையாளச் சின்னத்தை மையப்படுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முயற்சி செய்து வருகிறார். ஆனால், அவரின் தனிப்பட்ட பிரபலத்தை உயர்த்துவது கட்சிக்கு அடுத்த தேர்தலில் முக்கிய சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.