திமுகவில் இணையும் அதிமுக அமைச்சர்.. உதயநிதி போடும் பிளான்!!

0
1075
AIADMK minister to join DMK.. Udayanidhi side's attempt
AIADMK minister to join DMK.. Udayanidhi side's attempt

ADMK DMK: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஆளுங்கட்சியான திமுகவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தலைவர்களும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அவரது தொகுதியிலேயே சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து தோல்வியை தழுவினார்.

2026லும் இது தான் நடக்குமென்று அவர் நினைக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்தார். எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமை மேல் அதிருப்தியில் இருந்தார். மேலும் அவருக்கு அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதில் துளியும் விருப்பமில்லை. இதனை மையமாக வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு அவரை திமுகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்பிய போது பதவிக்காக யார் முன்பும் நிற்கும் ஆள் நான் கிடையாது. நான் திமுகவில் இணைய போகிறேன் என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்றும், நான் என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செல்ல கூடியவன் என்றும் கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் இவர் திமுகவில் இணைய மாட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அவரை இணைக்கும் முயற்சியில் மீண்டும் திமுக களமிறங்கி உள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஒருவேளை திமுகவில் இணைந்தால் அவருடைய தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளராக அதிமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Previous articleஅன்புமணியிடம் உள்ளது வெறும் கூட்டம் தான்.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாமக ஒருங்கிணைப்பாளர்!!
Next articleகே.பி.முனுசாமி வைத்த ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்!!