அதிமுக எம்எல்ஏ செய்த சர்ச்சை செயல்.. சேலத்தில் அரங்கேறிய கொடூரம்!! ஷாக்கில் இபிஎஸ்!!

0
292
AIADMK MLA's controversial act.. Atrocity staged in Salem!! EPS on SHOCK!!
AIADMK MLA's controversial act.. Atrocity staged in Salem!! EPS on SHOCK!!

ADMK: அதிமுகவில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. அதற்காக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வரும் இபிஎஸ், பாஜக மற்றும் தமாக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் இவ்விரண்டு கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் இபிஎஸ்க்கு அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் முக்கிய அமைச்சரான சிவி சண்முகம் திமுக அரசு இலவசமாக வழங்கும் திட்டங்களுடன் பெண்களை ஒப்பிட்டு பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டங்கள் எழுந்தது. மேலும், ஆத்தூர் அருகே உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகி, துப்புரவு பணி செய்யும் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக அவரை போலீசார் கைது செய்தனர். இதன் அடிப்படையில், அவர் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இவ்வாறு அதிமுகவின் முக்கிய அமைச்சர்களால் பெண்களுக்கு தொடர்ந்து வன்முறை நடந்து வரும் சமயத்தில், தற்போது புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில், திமுகவின் முன்னாள் எம்பியும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ-வுமான அர்ஜுனன், பேச்சுவார்த்தையின் போது ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவை சேர்ந்தவர்களால் இது போன்ற நிகழ்வு நடைபெறுவது அதிமுகவிற்கு தேர்தலில் பேரிழப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு அதிமுகவின் மேல் பயம் ஏற்பட்டுள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Previous articleமுதல்வர் பதவியை உதறிய விஜய்.. விரக்தியில் செங்கோட்டையன்!! குஷியான இபிஎஸ்!!