கூட்டணிக்காக தேமுதிகவிடம் மன்றாடும் அதிமுக.. தப்பு எங்க மேல தான்!! ஒப்பு கொண்ட அதிமுக அமைச்சர்!!

0
126
AIADMK pleads with DM for alliance.. The fault lies with us!! AIADMK minister who agreed!!
AIADMK pleads with DM for alliance.. The fault lies with us!! AIADMK minister who agreed!!

ADMK DMDK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகளை வரை, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தேர்தல் என்றாலே கூட்டணி கணக்குகள் தான் பரபரப்பாக பேசப்படும். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்ட அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மறந்து கூட்டணி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யின் தவெகவிற்கு பெருகும் ஆதரவை கண்ட அதிமுக-பாஜக அவரை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்றும், தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும் தனது முடிவை பகிரங்கமாக அறிவித்தார்.

இதனால் இவ்விரண்டு கட்சிகளும் விஜய் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இவர்களின் விஜய்க்கான ஆதரவு அனைத்தும், வன்மமாக மாறியது. பாஜக டெல்லியில் சக்தி வாய்ந்த கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் காலூன்ற ஒரு பலம் வாய்ந்த கட்சி தேவைப்படுகிறது. அதற்கு அதிமுக மட்டுமே போதாது என்று பாஜக நினைத்தது. அதிமுகவும் தற்சமயம் பல பிரிவுகளாக இருப்பதால் அதன் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. இதனை விஜய்யை வைத்து சரி கட்டி விடலாம் என்று இபிஎஸ் நினைத்தார். இவர்களின் ஆசை நிறைவேறாமல்  போனதால், அடுத்த கட்ட அரசியல் நகர்வாக தேமுதிகவிடம் அதிமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று தகவல் பரவியது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஒரு கருத்தை கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர், வேட்பாளராக விஜய் பிரபாகரன் நிறுத்தப்பட்டார். இவரின் தோல்விக்கு காரணம் அதிமுக போதிய வசதிகளை இந்த பகுதிக்கு செய்து தராததே ஆகும் என்று அவர் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தேமுதிக, திமுக பக்கம் செல்லாமல் தவிர்ப்பதர்க்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கும் சமயத்தில் அதனை சரி செய்யும் வகையிலும் இவரின் பேச்சு அமைந்துள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், அதிமுக கூட்டணிக்கு யாரும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் வேறு வழியில்லாமல் தேமுதிகவிடம் கையேந்தும் நிலைமைக்கு அதிமுக தள்ளப்பட்டு விட்டது என்றும் பலர் கூறி வருகின்றனர்.

Previous articleவிஜய் தலையில் இறங்கிய இடி.. சுக்குநூறான அரசியல் கணக்கு!! மண்ணை கவ்விய PK!!
Next articleஎங்கள் எதிரி தவெக தான்.. அதிமுக அல்ல!! வெளிப்படையாக பேசிய ஸ்டாலின்!!