Breaking News

அதிமுக மாநிலங்களவை எம்பி பதவிக்கான சீட்டு இவர்களுக்கா.. அதிரடி காட்டப்போகும் EPS!!

AIADMK Rajya Sabha MP ticket for these people.. EPS will show action!!

மாநிலங்களவை எம்பி பதவி முடிவுக்கு வரும் நிலையில் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுகவிற்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பாக 4 மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கவிஞர் சல்மா, சேலம் எஸ் ஆர் சி சிவலிங்கம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுக சார்பாக மாநிலங்களவை வேட்பாளர்கள் தற்போது வரை அறிவிக்கவில்லை. இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக இரண்டு மாநிலங்களவை எம்பி பதவிகள் உள்ள நிலையில் 41 மாவட்ட செயலாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மேலும் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தக் கூட்டத்திற்கு பிறகு எம்பி தேர்தலுக்கான இரண்டு வேட்பாளர்கள் யார் என தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி செயலாளர் இன்ப துரை, கொள்கை பரப்பு செயலாளர் வித்யா செம்மலை, பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் உள்ளிட்டோரின் பெயர்கள் மாநிலங்களவை எம்பி சீட்டு வழங்கும் பெயர்களில் அடிபடுவதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

தேமுதிக வுக்கு MP சீட் இல்லை.. இது தான் எடப்பாடி முடிவு-பத்திரிக்கையாளர் மணி!!

இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.. புற்று நோயாக இருக்க அதிக வாய்ப்பு!!