
ADMK TVK: 2026க்கு முன்பு வரை தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சிகள் தான் ஆட்சி செய்து வந்தது. தற்போது அவற்றை பின்னுக்கு தள்ளும் வகையில், தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திமுகவை அரசியல் எதிரியாக கருதிய விஜய், கரூரில் ஏற்பட்ட விபத்து காரணமாக அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளார்.
விபத்திற்கு காரணம் திமுகவின் கவனக்குறைவும், தவெகவின் குறைந்த அரசியல் அனுபவமும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையை பயன்படுத்தி அதிமுக அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் அரசியல் அனுபவம் இல்லாத விஜய்யை திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதிமுக அவருக்கு ஆதரவு அளித்தால் அக்கட்சியின் மேல் மக்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகும் என்பதையும், விஜய்யும் அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு வருவார் என்பதையும் மனதில் வைத்து தான் இபிஎஸ் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
மேலும் தவெகவிற்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதால், நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை இளைஞர் பட்டாளத்தை வைத்து முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று அதிமுக தலைமை திட்டம் திட்டி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவை வீழ்த்தி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இருக்கும் இபிஎஸ்க்கு விஜய்யின் வருகை சாதகமாக அமைந்துள்ளது.